
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு.
பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இப்படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். அதே நேரம் முதலில் அந்த வேடத்தில் நடிக்க விருந்தது மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்தானாம். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக ஒய்.ஜி.மகேந்திரனை நடிக்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை ஒரு பேட்டியில் வெங்கட்பிரபுவே தெரிவித்தார்.