தற்போது தெலுங்கு, கன்னட படங்கள் தற்போது அந்த மொழிகளில் மட்டுமில்லாமால் தமிழ், மலையாளம் ,ஹிந்தி என அனைத்து மொழிகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. எனவே, இதை பேன் இண்டியா திரைப்படங்கள் என அழைக்கின்றனர். பாகுபலி திரைப்படம்தான் இதை துவக்கி வைத்தது. அதன்பின் புஷ்பா, ஆர்.ஆர்.அர் , கேஜிஎப்-2 போன்ற படங்களில் பல மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

எனவே, இந்த ஆசை தமிழ் சினிமா நடிகர்களுக்கும் வந்துள்ளது. ஏற்கனவே, விஜய் தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஒருபக்கம் தனுஷ், சிவகார்த்திகேயனும் புதிய பேன் இண்டியா படங்களில் நடிக்கவுள்ளார்.

sudha

இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது அஜித்தும் இணைந்துள்ளார். சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சுதா கொங்கராவின் மதிப்பை இந்திய அளவில் உயர்த்தியுள்ளது. அடுத்து, கேஜிஎப் – 2 படத்தை தயாரித்த நிறுவனத்துடன் சுதா கொங்கரா கை கோர்த்துள்ளார். இந்த படமும் பேன் இண்டியா படமாகத்தான் உருவாகவுள்ளது.

சுதாகொங்கரா ஏற்கனவே அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எனவே, அஜித்தே இப்படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால் அஜித்தும் பேன் இண்டியா ஹீரோவாகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.