web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

மாநாடு வெளியாகி 50 நாட்கள்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சுரேஷ் காமாட்சி…

சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை வெங்கட் பிரபு தயாரித்திருந்தார். பல தடைகளை மீறி இப்படம் வெற்றி பெற்றது. டைம் லூப் திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எல்லோருக்கும் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது அவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:

தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும்.

மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது.

நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது.

50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணையானது.

suresh kamatchi

இடையில் புதுப்படங்கள் வந்து போனாலும் #மாநாடு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டான்.. வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல.

வெற்றி தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் என்பதாக இந்த வெற்றி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.

இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன் TR, இயக்குநர் வெங்கட் பிரபு, ஃபைனான்சியர் திரு. உத்தம் சந்த் அவர்களுக்கும்…

அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், வாங்கிய விநியோகஸ்தர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பண்பலை நண்பர்கள் மற்ற மொழியிலும் இப்படத்தைக் கொண்டு சேர்த்த பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும், என் தாய் தந்தைக்கும் இவ்வெற்றியை சமர்ப்பித்து மகிழ்கிறேன்.

என அவர் பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: