லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அதோடு, இப்படத்தில் கடைசி 5 நிமிடங்கள் வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் சூர்யா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏனெனில், அந்த கெட்டப்பில் சூர்யா செம மிரட்டலாக இருப்பதுதான். எனவே, இந்த கெட்டப்பில் ஒரு முழு படம் நடியுங்கள் என சூர்யா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரை நச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், விக்ரம் 3 பாகத்தில் சூர்யா படம் முழுக்க வருவார் என கமல்ஹாசன் தற்போது உறுதி செய்துள்ளார். எனவே, லோகேஷ் கனகராஜ் – கமல்ஹாசன் – சூர்யா என 3 பேரும் விக்ரம் 3 படத்தில் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
It's official – #Vikram vs #rolex coming up next. @ikamalhaasan confirms it in his thanks note!
— Siddarth Srinivas (@sidhuwrites) June 7, 2022