லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்பரைஸ் கொடுத்துள்ளது.
இந்நிலையில், சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘டியர் அன்பான கமல் அண்ணா,எப்படி சொல்றது?… உங்களுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நிறைவேறியுள்ளது. இதை சாத்தியப்படுத்திய லோகேஷ் கனகராஜுக்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு டிவிட்டரில் பதில் கூறியுள்ள கமல் ‘டியர் சூர்யா தம்பி. இது எப்போதே நடக்க வேண்டியது. என் அன்பு உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது. உங்களுக்கு எல்லாம் வெற்றியாக அமையட்டும் தம்பி. சாரி தம்பி சார்’ என பதிவிட்டுள்ளார்.