web analytics
Wednesday, October 5SOCIAL MEDIA

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…விரைவில் சிங்கப்பூர்?!… டி.ராஜேந்தருக்கு என்னாச்சு?!

rajendar

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், கதாசிரியர், பாடலாசியர் என சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். 80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் சிம்பு வளர வளர இவர் திரையுலகிலிருந்து விலகி இருந்தார்.

அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது, சிம்பு படங்களில் பாடுவது என பரபரப்பை ஏற்படுத்துவார்.

இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும், விரைவில் அவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அவரின் குடும்பத்தினர் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

%d bloggers like this: