
உதயநிதிக்கு வில்லனாகும் பஹத் பாசில் – பரபர அப்டேட்….
மலையாளத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் பஹத் பாசில். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ள புஷ்பா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம். கர்ணன் திரைப்படத்திற்கு பின் இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினோடு பஹத் பாசில் இணைவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....