
புது கெட்டப்புக்கு மாறும் அஜித்!….அட இதுக்குதான் அத்தனை போட்டோ வெளிய வந்துச்சா!…
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், புனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அஜித் லண்டன் கிளம்பி சென்றார். ஆனால், அவர் எதற்காக அங்கு சென்றார் என்கிற காரணம் தெரியாமல் இருந்தது.
அதன்பின், ஜாலியாக பைக் ஓட்டத்தான் சென்றிருக்கார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இப்படி ஏன் புகைப்படங்கள் வெளியானது என்பதற்கு பின்னணியாக ஒரு முக்கிய காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தில் அஜித் நீண்ட வெள்ளை நிற தாடியுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்ற உள்ளாராம். அதாவது இப்படத்தில் மொத்தம் 2 கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளாராம். எனவே, பழைய கெட்டப்பை எவ்வளவு ...