
அந்த நடிகருடன் நடிக்க ஆசை – கேள்விக்கு பதில் சொன்ன தனுஷ்
நடிகர் தனுஷ் அவ்வப்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தான் அட்ராங்கி ரே. இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். மேலும், சாரா அலிகான், அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அவரின் இசையில் அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற 24ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழில் இப்படம் ‘கலாட்டா கல்யாணம்’ என்கிற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் தனுஷ் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது எந்த பாலிவுட் நடிகருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என செய்தியாளர் கேட்டதற்கு அவர் கூறிய பதில் ‘ரன்பீர் கபூர்’. அவரின் நடிப்பு எப்படி திரையில் வருகிறது என்பதை ...