
மீண்டும் துவங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு.. எப்போது தெரியுமா?…
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். மேலும் படக்குழுவினருக்கு கொரோனா பரவியதாலும், ரஜினியின் உடல்நிலை காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதேநேரம், தற்போது ‘அண்ணாத்தே’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் அண்ணாத்தே திரைப்படம் 2021 நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
ஓய்வில் இருந்த ரஜினி தற்போது படப்பிடிப்பிற்கு ஓகே சொல்லிவிட்டாராம். எனவே, அடுத்த கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்க சிவா திட்டமிட்டுள்ளார். மேலும், ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விடவும் அவர் திட்டமிட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது....