
பொன்ராம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ்?….
தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிதான் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர். அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பெமினா இந்திய அழகி பட்டத்தை வெற்றி பெற்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கதிர், கயல் ஆனந்தி,நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்....