web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: அனுஷ்கா

எல்லா படமும் தோல்வி!…அனுஷ்காவுடன் மீண்டும் ஜோடி போடும் பிரபாஸ்…

எல்லா படமும் தோல்வி!…அனுஷ்காவுடன் மீண்டும் ஜோடி போடும் பிரபாஸ்…

News, Tamil News
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றியால் பிரபாஸின் மார்க்கெட் மதிப்பு தாறுமாறாக அதிகரித்தது. ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக அவர் உயர்ந்தார். ஆனால், பாகுபலிக்கு பின் அவரால் வெற்றிப்படங்களை கொடுக்க முடியவில்லை. அவர் நடிப்பில் வெளியான சாஹோ படம் தோல்வி அடைந்தது. அதேபோல், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படமும் படு தோல்வி. இப்படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், மீண்டும் ஹிட் கொடுக்க வேண்டுமெனில் அனுஷ்காவுடன் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் பிரபாஸ். தெலுங்கு பட இயக்குனர் மாருதி இயக்கவுள்ள ‘ராஜா டீலக்ஸ்’ எனும் புதிய படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி போடவுள்ளனர் என செய்திகள் ...
விரைவில் ஓடிடியில் பாகுபலி 3 – பரபர அப்டேட்

விரைவில் ஓடிடியில் பாகுபலி 3 – பரபர அப்டேட்

News, Tamil News
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலில் இப்படம் 2 பாகங்களாக உருவாகியிருந்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா சர்மா, தமனா, சத்தியராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் விரும்புகிறது. இதற்காக ராஜமவுலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 எபிசோடுகளாக இப்படத்தை அந்நிறுவனம் எடுக்க விரும்புகிறது. எனவே, விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது....