
மேடையில் கெட்டவார்த்தை பேசிய இயக்குனர் ஹரி….இதெல்லாம் சரியில்ல!…
தமிழ் சினிமாவில் அருவா இயக்குனர் என்றால் அது ஹரி என எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் அவரின் திரைப்படங்களில்
கதாநாயகன், வில்லன் மற்றும் வில்லனின் அடியாட்கள் என அனைவரும் அருவாள் வைத்திருப்பார்கள். தற்போது நடிகரும், அவரின் மைத்துனருமான அருண் விஜயை வைத்து யானை எனும் புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லரில் அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், ப்ரியா பவானி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் சண்டை காட்சிகள் பற்றி பேசிய ஹரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ‘****மால’ என்கிற கெட்டவார்த்தை பேசிவிட்டார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிரிக்க துவங்கிவிட்டனர். ...