
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? – கசிந்த தகவல்
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அர்ச்சனா, ஆரி, ஆஜித், ரியோ ராஜ், ரம்யா, ஷிவானி, சோம் சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
கடந்த வாரம் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா என இருவர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஒருவரா அல்லது இருவரா என தெரியவில்லை.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வெளியேற்றப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம், தனக்கென ஒரு குருப்பை உருவாக்கி, நேர்மையாக விளையாடி வரும் ஆரி மற்றும் பாலாஜியை அவர் தொடர்ந்து நாமினேட் செய்து ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் ஆஜித் வெளியேறுகிறார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. எதுவாகினும், இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்....