
கட்சி தொடங்கப்போவதில்லை!…அரசியல் முடிவிலிருந்து பின் வாங்கிய ரஜினி…
கடந்த 20 வருடங்களுக்கு மேலே அரசியலுக்கு வருவது பற்றி இலை மறைவு காய் மறைவாக பேசி வந்த ரஜினி சமீபத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். வருகிற 31ம் தேதி கட்சியை அறிவிப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சியை துவங்குவதாகவும் கூறினார்.
ஆனால், அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற போது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு சில அறிவுரைகளை கூறினர். குறிப்பாக மக்களை சந்தித்து கொரொனாவில் சிக்கி விடாதீர்கள் என எச்சரித்தனர்.
இந்நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி தான் அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
pic.twitter.com/bUzAYURjdv
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020
...