
செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’- மாஸ் அறிவிப்பு…
கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் சோழர் பரம்பரை பற்றியதாக இருந்ததால் ரசிகர்களுக்கு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தை கொடுத்தது.
இந்நிலையில், 10 வருடங்களுக்கு பின் இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில், தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை செல்வராகவனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....