
மாஸ் காட்டும் சிம்பு… லைக்ஸ் குவிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சிம்பு மாநாடு மற்றும் பத்து தல எனும் 2 படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மட்டுமில்லாமல் கௌதம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரியா பவானி சங்கரும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
#PathuThala #ObelinKrishna #Studiogreen#SilambarasanTR45 #studiogreen20#pathuthalai #pathuthalaiofficial#STR#SilambarasanTR #GauthamKarthik #Priyabhavanishankar #Teejay pic.twitter.com/4gwKtXGTpK
— Silambarasan TR (@SilambarasanTR_) January 18, 2021
...