web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: இயக்குனர் சிவா

கேஜிஎப், பாகுபலி ஸ்டைலில் உருவாகும் சூர்யாவின் புதிய படம்….அசத்தல் அப்டேட்….

கேஜிஎப், பாகுபலி ஸ்டைலில் உருவாகும் சூர்யாவின் புதிய படம்….அசத்தல் அப்டேட்….

News, Tamil News
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.சூர்யாவின் கையில் பாலா இயக்கத்தில் ஒரு படம், அடுத்து சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறனுடன் வாடிவசல் என 3 படங்கள் இருக்கிறது. இதில், பாலா படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், படப்பிடிப்பில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இப்படம் தொடருமா என்பதே சந்தேகமா இருக்கிறது. இந்நிலையில், சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் வேலைகள் துவங்கியுள்ளது. இப்படம் ஒரு பீரியட் கதை எனவும், பாகுபலி, கேஜிஎப் போல இப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா….தெறி மாஸ் அப்டேட்….

News, Tamil News
சிறுத்தை படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் சிவா.. அடுத்து அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினர். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சிவாவின் அணுகுமுறை அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து தனது படங்களை இயக்கும் வாய்ப்பை அஜித் அவருக்கு கொடுத்தார். மேலும், ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தையும் சிவா இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. வலிமை படத்திற்கு பின் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது படமாகும். இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அது அஜித்தின் 62வது திரைப்படமாகும். இந்த படங்களுக்கு பின் மீண்டும் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதகவும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இது அஜித்தின் 63வது தி...
மீண்டும் துவங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு.. எப்போது தெரியுமா?…

மீண்டும் துவங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு.. எப்போது தெரியுமா?…

News, Tamil News
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். மேலும் படக்குழுவினருக்கு கொரோனா பரவியதாலும், ரஜினியின் உடல்நிலை காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதேநேரம், தற்போது ‘அண்ணாத்தே’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் அண்ணாத்தே திரைப்படம் 2021 நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஓய்வில் இருந்த ரஜினி தற்போது படப்பிடிப்பிற்கு ஓகே சொல்லிவிட்டாராம். எனவே, அடுத்த கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்க சிவா திட்டமிட்டுள்ளார். மேலும், ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விடவும் அவர் திட்டமிட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது....
அண்ணாத்தே படப்பிடிப்பு நடக்குமா?… முக்கிய அப்டேட்…

அண்ணாத்தே படப்பிடிப்பு நடக்குமா?… முக்கிய அப்டேட்…

News, Tamil News
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த அண்ணாத்தே படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ரஜினி ஒரு மாதம் ஓய்வு எடுக்கவுள்ளார். அதன்பின், பிப்ரவரியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது....
மருத்துவமனையில் ரஜினி… சிகிச்சை பின்னணி என்ன?..

மருத்துவமனையில் ரஜினி… சிகிச்சை பின்னணி என்ன?..

News, Tamil News
பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும், தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. ரஜினிக்கு நெகட்டிவ் என வந்தாலும் அவர தன்னை 15 நாட்கள் தனைமைப்படுத்திக்கொள்ள திட்டமிட்டார். இதற்கிடையில் அவரின் ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையி...