web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: இயக்குனர் நெல்சன்

ரஜினியை இயக்கப்போவது இவர்தான்!.. வெளியான வீடியோ….இது சூப்பர் காம்போ!….

ரஜினியை இயக்கப்போவது இவர்தான்!.. வெளியான வீடியோ….இது சூப்பர் காம்போ!….

News, Tamil News
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. பாபா படத்தில் இது துவங்கியது. மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார் ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் அவர் அப்செட்டில் இருக்கும் ரஜினி அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவரின் படங்களை இயக்கும் இயக்குனர்களின்பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார், நெல்சன் என பலரின் பெயர்கள் அடிபட்டது. தற்போது இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்கு...
அந்த நடிகையை ரெக்கமண்ட் செய்த நெல்சன்..நோ சொன்ன விஜய்…

அந்த நடிகையை ரெக்கமண்ட் செய்த நெல்சன்..நோ சொன்ன விஜய்…

News, Tamil News
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவரை இயக்குனர் நெல்சன் தனது டாக்டர் படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் பிரியங்கா மோகன். அவரின் நடிப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. மேலும், இப்படம் ரூ100 கோடி வசூலை பெற ஹிட் பட ஹீரோயின் ஆகிவிட்டார் பிரியங்கா மோகன்.. எனவே, விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் ஒரு வேடத்தில் அவரை நடிக்க வைக்க நினைத்தார் நெல்சன். ஆனால், வேண்டாம் என சொல்லி விட்டாராம் விஜய். இதில், அப்செட் ஆன பிரியங்காவிடம் ‘கவலைப்படாதே. அடுத்து ரஜினி படத்தை இயக்கப்போவது நான்தான். அதில், உனக்கு நல்ல வேடம் கொடுக்கிறேன்’ என உறுதியளித்துள்ளாராம் நெல்சன்... பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
பீஸ்ட் படம் ஷூட்டிங் ஓவர்.. வைரலாகும் விஜய் – நெல்சன் புகைப்படம்…

பீஸ்ட் படம் ஷூட்டிங் ஓவர்.. வைரலாகும் விஜய் – நெல்சன் புகைப்படம்…

News, Tamil News
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ...
ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்

ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் இறுதிகட்ட பணியில் நெல்சன் இருப்பதால் ஏப்ரல் மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது....
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

News, Tamil News
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாவதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
விஜயின் 66வது படத்தை இயக்கப்போவது யார்? – 4 இயக்குனர்களிடையே கடும் போட்டி

விஜயின் 66வது படத்தை இயக்கப்போவது யார்? – 4 இயக்குனர்களிடையே கடும் போட்டி

News, Tamil News
மாஸ்டருக்கு பின் விஜயின் 65வது படத்தை நெல்சன் இயக்கப்போவது எல்லோருக்கும் தெரியும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், விஜயின் 66வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத், அட்லீ, அஜய் ஞானமுத்து 4 இயக்குனர்களின் பெயர் அடிபடுகிறது. ரேஸில் யார் முந்துவார்கள் என்பது விரைவில் தெரியவரும்....
தளபதி 65 ஷூட்டிங்கில் பெரிய மாற்றம் – அப்செட்டில் விஜய் ரசிகர்கள்

தளபதி 65 ஷூட்டிங்கில் பெரிய மாற்றம் – அப்செட்டில் விஜய் ரசிகர்கள்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் தற்போது டாக்டர் படத்தின் இறுதி கட்ட வேலையில் பிஸியாக இருக்கிறார். மார்ச் மாதம் டாக்டர் படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே விஜய் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குவதாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் பட பணிகள் காரணமாக தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்பை முடித்து 2021 தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால்,தீபாவளிக்கு அண்ணாத்தே படம் வெளியாவதால் 2022 பொங்கல் பண்டிகையின் போது இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது....
தளபதி 65 அப்டேட் கொடுங்க!.. நெல்சனை விஜய் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட சிவகார்த்திகேயன்…

தளபதி 65 அப்டேட் கொடுங்க!.. நெல்சனை விஜய் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட சிவகார்த்திகேயன்…

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்க்கு 65வது படமாகும். இந்நிலையில், லைக்கா தயாரிப்பில் டான் என்கிற புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு டாக்டர் பட இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி கூறிய விஜய் ‘நன்றினா. டாக்டர் அப்டேட் எதுவும் இல்லையா?.. விஜய் சார் படம் அப்டேட் (எப்படி கோர்த்து விட்டேனா?’என ஜாலியாக பதிவிட்டார். இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் ‘ஒரு முன்னணி நடிகர் கொஞ்சம் கூட ஈகோ பார்க்காம..இன்னொரு பெரிய நடிகரோட படத்துக்கு அப்டேட் கேட்குறது எல்லாம் வேற லெவல்’ என நெகிழ்ந்து வருகின்றனர்.   Hahahaha .... adei vaazthu sonnathuku ipadiya 🤪🤣 @Siva_Kartikeyan https://t.co/gh8VXL2ZXq — Nelson Dilipkumar (@Nelsondilpkum...
விஜயுடன் ஜோடி போடும் பிரபல நடிகை… வயித்தெறிச்சலில் சக நடிகைகள்…

விஜயுடன் ஜோடி போடும் பிரபல நடிகை… வயித்தெறிச்சலில் சக நடிகைகள்…

News, Tamil News
விஜயின் ஒவ்வொரு படமும் துவங்கும் போதும் அதில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என முன்னணி நடிகைகள் முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. தற்போது அந்த வாய்ப்பு தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்துள்ளது. நெல்சன் இயக்கதில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை தெரிய வரும். பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது....