
ஒரு போட்டோவில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா….இது செம அப்டேட்!..
சூர்யாவை வைத்து நந்தா மற்றும் பிதாமகன் என இரண்டு திரைப்படங்களை பாலா இயக்கினார். அதன்பின், பல வருடங்கள் இருவரும் இணையவில்லை. ஒருபக்கம் சூர்யாவும் வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். பாலாவும், சூர்யாவும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தனர். இப்படத்தை சூர்யாவே தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கியது.
ஆனால், இந்த படப்பிடிப்பில் சில காரணங்களால் பாலாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபப்பட்ட சூர்யா படப்பிடிப்பிலிருந்து வெளியேறி சென்னை வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இப்படம் டிராப் ஆக வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.
ஆனால், படப்பிடிப்பு தளத்தில் பாலாவுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ‘மீண்டும் படப்பிடிப்பு துவங்க காத்திருக்கிறேன்’ என சூர்யா பதி...