
ராஜேஷ் – ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘வணக்கம்டா மாப்ள’ – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ராஜேஷ். தற்போது நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை வைத்து புது புதிய படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் அம்ரிதா ஐயர், ஆனந்தராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ,இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
...