web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: எதற்கும் துணிந்தவன்

சூர்யா சம்பளம் இவ்வளவுதானா?….ஷாக்கான ரசிகர்கள்…

சூர்யா சம்பளம் இவ்வளவுதானா?….ஷாக்கான ரசிகர்கள்…

News, Tamil News
நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் அஜித் விலக அவருக்கு பதில் நடிக்க வந்தவர். சினிமாவில் ஆர்வமே இல்லாமல் இருந்தவரை நடிக்க வைத்தார் இயக்குனார் வசந்த். அதன்பின் பல படங்களில் சாக்லெட் பாய் வேடம். சேது பார்த்துவிட்டு பாலாவிடம் தன்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என கோரிக்கை வைக்க அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா. அதன்பின் கவுதம் மேனனின் காக்க காக்க, பின்னர் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.அதன்பின் பல படங்கள் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். மேலும், நல்ல கதையும்சம் கொண்ட திரைப்படங்களையும் அவர் தயாரித்து வருகிறார். ஜெய்பீம் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஒருபக்கம் மற்ற தயாரிப்பாளர்களின் படத்திலும் அவர் நடித்து வருகிறார். அப்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தய...
எல்லாத்துக்கும் சூர்யாதான் காரணம்… பாகுபலி வில்லன் நடிகர் ஓப்பன் டாக்..

எல்லாத்துக்கும் சூர்யாதான் காரணம்… பாகுபலி வில்லன் நடிகர் ஓப்பன் டாக்..

News, Tamil News
தெலுங்கு நடிகர் ராணா டகுபதி சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக அவர் கலக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற 10ம் தேதி இந்தியா முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஹதராபாத்தில் நடைபெற்றது. இதில்,சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ராணா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ராணா ‘10 வருடங்களுக்கு முன்பு நான் நடித்த ஒரு படத்தை எடிட்டிங் அறையில் சூர்யா பார்த்தார். எ ந்த கருத்தும் தெரிவிக்காமால் என்னை காரில் அழைத்து சென்று ஹைதரபாத்தின் தெருக்களில் சுற்றினார். நீ இப்படத்தில் நடிக்கவே இல்லை. சும்மா சமாளித்திருக்கிறாய் என ஓப்பனாக பேசினார். அதன்பின் அ...
எதற்கும் துணிந்தவன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. சூர்யா ஃபேன்ஸ் செம ஹேப்பி…

எதற்கும் துணிந்தவன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. சூர்யா ஃபேன்ஸ் செம ஹேப்பி…

News, Tamil News
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சூரி, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்திற்கு பின் இப்படம் வெளியாவதால் சூர்யா ரசிகர்களிடையே இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், ஆர்.ஆர்.ஆர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
5 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம் – புதிய அறிவிப்பு

5 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம் – புதிய அறிவிப்பு

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சூரி, சத்தியராஜ் என பலரும் நடித்துள்ளனர். குடும்ப பாங்கான படங்களை இயக்கி வரும் பாண்டிராஜ் இப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்‌ஷன் விருந்தையும் ரசிகர்களுக்கு வைத்துள்ளார்.இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக சூர்யா நடிக்கும் ஒரு திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ...