
உலக அளவில் முதலிடம்.. சாதனை படைத்த ‘ஓ சொல்றியா’பாடல் வீடியோ….
உலக மக்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படும் வீடியோக்கள் யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நடந்த நிகழ்வுகள், திரைப்பட பாடல்கள், டீசர், டிரெய்லர், குறும்படங்கள் என பல வகையான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்ற ‘ஓ அண்டவா’ தெலுங்கு மொழி பாடல் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. கடந்த வாரத்தில் உலக அளவில் இந்த பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இப்பாடல் முதலிடத்தில்தான் இருக்கிறது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார்
யுடியூப்பில் ‘ஓ அண்டவா’ பாடல் 90 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் தமிழ் வெர்சன் ‘ஓ சொல்றியா’ பாடல் 27 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 16 மில்லியன் பார்வைகளையும், கன்னடத்தில் 10 மில்லியன் பார்வை மற்றும் மலையாளத்தில் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்று...