
திரௌபதி பட இயக்குனர் படத்தில் முக்கிய வேடத்தில் கவுதம் மேனன்….
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன். அதன்பின் இவர் இயக்கிய திரௌபதி திரைப்படம் சாதி ரீதியான சர்ச்சைகளை எழுப்பியது. தற்போது, ருத்ர தாண்டவம் என்கிற ஒரு புதிய படத்தை மோகன் இயக்கவுள்ளார். இப்படத்திலும் திரௌபதி படத்தில் நடித்த நடிகர் ரிச்சர்ட்டே ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடிப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் சார் வாதாபிராஜனாக #ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் 😍😍#RudraThandavam pic.twitter.com/sGvSv2pJav
— Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) February 14, 2021
...