
அந்த படத்தலாம் நாங்க ரிஜெக்ட் பன்னல!… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாந்தனு…
இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜின் மகன் சாந்தனு. திரைக்கதை மன்னன் திரையுலகம் பாக்கியராஜை புகழ்ந்தாலும், மகனை வெற்றிப்பட நடிகராக அவரால் மாற்றமுடியவில்லை. சாந்தனவும் முழு திறமைகளையும் காட்டி நடித்து பார்த்தார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.
ஒருபக்கம் ஷங்கர் இயக்கிய பாய்ஸ், விமல் நடித்த களவாணி, சுப்பிரமணிய புரம் படத்தில் ஜெய் கதாபாத்திரம், காதல் படத்தில் பரத்தின் வேடம் என அவரை வாய்ப்புகள் தேடி வந்ததாகவும், அப்படங்களை பாக்கியராஜ் நிராகரித்துவிட்டதாகவும் பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இதை ஒரு இணையதளம் டிவிட்டரில் பகிர்ந்திருந்தது.
அதற்கு பதில் கொடுத்துள்ள சாந்தனு ‘அந்த படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது உண்மை. ஆனால், சில காரணங்களால் என்னால் அப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. எனவே, இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் அப்படத...