
காதல் பட காமெடி நடிகர் பாபு திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி
2004ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காதல். இப்படத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடும் வேடத்தில் நடித்தவர் பாபு. விருச்சககாந்த் என தன் பெயரை மாற்றிக்கொண்டு ஒரு டுபாக்கூர் இயக்குனரிடம் சென்று வாய்ப்பு கேட்பார். மேலும், நடிச்சா ஹீரோதான் சார்.. நான் வெயிட் பண்றேன் சார் என வசனம் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
அப்படத்திற்கு பின் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், அவரின் பெற்றோர்களும் உயிரிழந்தனர். எனவே, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றி திரிந்த அவர் கோவில்களில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் பிச்சை எடுத்து பிழைத்து வந்தார்.
இந்நிலையில், ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் அங்கேயே மரணம் அடைந்தார். ஏற்கனவே ரேனிகுண்டா படத்தில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசன் நேற்று மரணமடைந்த நிலையில், காதல் பாபுவின் மரணம் திர...