
படப்பிடிப்பில் விபத்து… நடிகர் பகத் சிங் படுகாயம்….சினிமா உலகம் அதிர்ச்சி…
மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஃபகத் பாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது ‘மலையன் குஞ்சு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தி படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது. இப்படத்திற்காக சண்டைக்காட்சியை படக்குழு படம்பிடித்து வந்தது. அப்போது பகத் பாசில் உயரத்திலிருந்து குதிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பகத் பாசில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரின் முகத்தின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
எனவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்....