web analytics
Thursday, August 11SOCIAL MEDIA

Tag: கார்த்திக் சுப்பாராஜ்

இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

News, Special Video, Tamil News, Videos
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி, சசிக்குமார், திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரஜினி ‘இன்னொரு டீ சாப்பிடலாமா?’ என பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய போஸ்டரையும் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார். https://www.youtube.com/watch?time_continue=20&v=Azefa5CdoeI&feature=emb_title...
விக்ரமின் புதிய படத்திலும் சிம்ரன்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து….

விக்ரமின் புதிய படத்திலும் சிம்ரன்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து….

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 15 வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அவரின் நடன அசைவுக்கே ரசிகர்கள் சொக்கி போய் கிடந்தனர். அவருடன் சேர்ந்து நடனமாடினால் தன்னை காலி செய்து விடுவார் என விஜய், அஜித் போன்ற நடிகர்களை பயந்த காலமும் உண்டு. திடீரென திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிய சிம்ரன், சில வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்தார். நல்ல கதைகளை தேர்ந்து நடித்து வருகிறார். தற்போது பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்திலும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமின் புதிய படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த தகவலை பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ...
அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் சிவன் – சியான் 60 படத்தில் அதிரடி மாற்றம்

அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் சிவன் – சியான் 60 படத்தில் அதிரடி மாற்றம்

News, Tamil News
சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இப்படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருந்தார். இப்படத்தில் விக்ரமோடு அவரிம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார். இப்படம் விக்ரமின் 60வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அவருக்கு பதிலாக தற்போது சந்தோஷ்சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை கார்த்திக் சுப்பாராஜே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் ‘புரிதலுக்கு நன்றி’ என அனிருத்திடம் கூறியுள்ளார்....
அண்ணாத்தே படத்திற்கு பின் அந்த இயக்குனர் படத்தில் ரஜினி.. கசிந்த தகவல்…

அண்ணாத்தே படத்திற்கு பின் அந்த இயக்குனர் படத்தில் ரஜினி.. கசிந்த தகவல்…

News, Tamil News
ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. கார்த்தி சுப்பாராஜ் தற்போது விக்ரம் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் முடிவடையும் எனவும், அடுத்த வருடம் அதாவது 2022 பிப்ரவதி மாதம் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனக்கூறப்படுகிறது. மேலும், 2022 வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது....
நெட்பிளிக்ஸில் வெளியாகிறதா ஜகமே தந்திரம் – தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி

நெட்பிளிக்ஸில் வெளியாகிறதா ஜகமே தந்திரம் – தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி

News, Tamil News
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாஇ ஏற்படுத்தியுள்ளது....