
கார்த்திக் படத்தில் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நவரச நாயகன் கார்த்திக். தற்போது அவர் திரைப்படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. ஆனால், அவரின் மகன் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் கார்த்திக் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் டி.எம். ஜெயமுருகன் இயக்கி வருகிறார்.இப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியகா சுகன்யா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 45 நாட்கள் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெறவுள்ளது. மும்பையில் இப்படத்திற்காக சன்னிலியோன் நடனம் ஆடும் காட்சிகளை படம்பிடிக்கவுள்ளனர்.
சன்னிலியோன் ஏற்கனவே வடகறி என்கிற படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....