
மோகன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி யார் தெரியுமா?…..
80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் மோகன். மைக் பிடித்து பாடல்களை பாடும் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்ததால் மைக் மோகன் என அழைக்கப்பட்டவர். இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழா படங்கள் ஆகும். இவர் நடிக்கும் பாடல்களில் மெலடியான பாடல்கள் இடம் பெற்றிருக்கும். இப்போதும் பலரும் கார் பயணத்தின் போது கேட்பது மோகன் பட பாடல்கள்தான்.
பல வருடங்களுக்கு பின் மோகன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள குஷ்பு தற்போது சூப்பர் சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....