
கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் இணையும் ரஜினி – மீண்டும் உருவாகிறது ‘ராணா’?
2012ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க ராணா திரைப்படம் துவங்கியது. ஆனால், படத்தின் பூஜை அன்றே ரஜினி படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார். அதன்பின் அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். எனவே, ராணா திரைப்படம் டிராப் செய்யப்பட்டது.
பல வருடங்களுக்கு பின் கே.எஸ்.ரவிக்குமாரிடம் மீண்டும் அப்படத்தின் கதையை ரஜினி கேட்டுள்ளார். கதை நன்றாக இருக்கிறது. ஆனால், உடல்நிலை காரணத்தால் இப்போது ராணா படத்தில் நடிக்க முடியாது. சரியான பின்னர் கண்டிப்பாக ராணாவை எடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளாராம். இதை கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எனவே, அண்ணாத்தே படத்திற்கு பின் ராணா படத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளது....