
நடிகர் மகேஷ்பாபுவுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், நடிகர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டதாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே, தமிழ் திரையுலகில் கமல்ஹாசன், வடிவேல், அர்ஜூன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....