web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: கொரோனா

வடிவேல் உடல் நிலை எப்படி இருக்கிறது? – மருத்துவமனை கொடுத்த அப்டேட்

வடிவேல் உடல் நிலை எப்படி இருக்கிறது? – மருத்துவமனை கொடுத்த அப்டேட்

News, Tamil News
தனது காமெடி மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. பல வருடங்களுக்கு பின் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக இப்படத்தின் இயக்குனர் சுராஜ், வடிவேல் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் லண்டன் சென்றனர். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, சென்னை போரூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பின் சுராஹுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வடிவேலுவுன் உடல் நிலை தொடர்பான செய்தி வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் ‘வடிவேலு கடந்த 23ம் தேதி கோவிட் பாசிட்டிவுடன் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
திரையரங்கில் 100 சதவீத இருக்கை அனுமதி ரத்து… 50 சதவீதம் மட்டுமே!…

திரையரங்கில் 100 சதவீத இருக்கை அனுமதி ரத்து… 50 சதவீதம் மட்டுமே!…

News, Tamil News
தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் டிவிட்டரில் கோரிக்கை விடுத்தார். அதன்பின் 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலைஇல், அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தமிழக அரசீன் முடிவுக்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வெளிவரும் வரை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது....