web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: கோலிவுட் அப்டேட்

மீண்டும் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு – பரபர அப்டேட்

மீண்டும் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு – பரபர அப்டேட்

News, Tamil News
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார். எனவே, அண்ணாத்தே படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்ணாத்தே படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ...
அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் – திருவாய் மலர்ந்த போனிகபூர்

அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் – திருவாய் மலர்ந்த போனிகபூர்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை. எனவே, இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ,மோடி, எடப்பாடி பழனிச்சாமி எல்லோரிடமும் அவர்கள் வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு அஜித் அறிவுரையும் செய்தார். இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட் செய்துள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   The first look and the promotions of #Valimai will be initiated from May1st on the occasion of Mr #AjithKumar's 50th birthday #AK50@BayViewProjOffl #Vinoth #Niravshah @SureshChandraa @thisisy...
பிரசாந்த படத்தில் வனிதா விஜயகுமார் – பரபர அப்டேட்

பிரசாந்த படத்தில் வனிதா விஜயகுமார் – பரபர அப்டேட்

News, Tamil News
பாலிவுட்டில் ஹிட் ஆன அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய நடிகர் தியாகராஜன் அதை அவரின் மகனும், நடிகருமான பிரசாந்தை வைத்து உருவாக்க முடிவெடுத்தார். இப்படத்திற்கு ‘அந்தகன்’ என தலைப்பு வைக்கப்பட்டது. முதல் இப்படத்தை இயக்க பேசப்பட்டவர் மோகன் ராஜா. அதன் பின் திடீரென அவர் விலகினார். அவருக்கு பின் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக் இயக்க முன் வந்தார். அதன் பின் அவரும் விலக தற்போது இப்படத்தை தானே இயக்குவது என முடிவெடுத்துள்ளார் தியாகராஜன். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, சிம்ரன் இப்படத்தில் நடிப்பது உறுதியானது. இப்படம் தொடர்பாக சில புகைப்படங்களை பிரசாந்த் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்....