web analytics
Tuesday, August 9SOCIAL MEDIA

Tag: கோலிவுட் சினிமா

தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து அப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும், மோகன்லால், மீனா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்த ஜீத்து ஜோசப் ‘கமல் விரும்பினால் பாபநாசம் 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்’ என பதிலளித்துள்ளார். அதேநேரம் தெலுங்கில் இப்படம் உருவாவது உறுதியாகியுள்ளது. மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளனர். வழக்க...
மாஸ்டர் கொடுத்த வரவேற்பு!.. தனுஷ் படத்தில் நடிக்கும் மாஸ்டர் மகேந்திரன்…

மாஸ்டர் கொடுத்த வரவேற்பு!.. தனுஷ் படத்தில் நடிக்கும் மாஸ்டர் மகேந்திரன்…

News, Tamil News
மாஸ்டர் படத்தில் சின்ன வயது விஜய சேதுபதியாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விழா என்கிற படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆனால், அப்படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. எனவே, அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கவுள்ளார். இப்படம் தனுஷின் 42வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.     Welcoming the super talented @Actor_Mahendran on board for #D43 💥💐@dhanushkraja @karthicknaren_M @gvprakash @MalavikaM_ @thondankani @Lyricist_Vivek @smruthi_venkat ⁦@KK_actoroffl⁩ pic.twitter.com/RZP9NXvOGH — Sathya Jyothi Films (@SathyaJyothi_) February 17, 2021 ...
சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் பழனிச்சாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட கதையெல்லாம் நடந்தது. அதோடு, நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் சில அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் இணையத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வலிமை படம் மீதான உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கொஞ்ச நாள் பொறுத்திருங்கள்’ என பதிவிட்டுள்ளார். போனிகபூரே அதிகாரப்பூர்வமாக வலிமை பட அப்டேட்டை கொடுத்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடந்த சில நாட்களாக என்...
மீண்டும் துவங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு.. எப்போது தெரியுமா?…

மீண்டும் துவங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு.. எப்போது தெரியுமா?…

News, Tamil News
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். மேலும் படக்குழுவினருக்கு கொரோனா பரவியதாலும், ரஜினியின் உடல்நிலை காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதேநேரம், தற்போது ‘அண்ணாத்தே’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் அண்ணாத்தே திரைப்படம் 2021 நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஓய்வில் இருந்த ரஜினி தற்போது படப்பிடிப்பிற்கு ஓகே சொல்லிவிட்டாராம். எனவே, அடுத்த கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்க சிவா திட்டமிட்டுள்ளார். மேலும், ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விடவும் அவர் திட்டமிட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது....
மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

News, Tamil News
ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் 3வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அவரையும் பிரிந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட வனிதா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார். பாம்பு சட்டை பட இயக்குனர் ஆடம் தாசன் இயக்கும் அடுத்த படத்தில் வனிதா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது....