web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: கோலிவுட் செய்திகள்

யுடியூப்பில் ஆர்யாவின் ‘டெடி’ டிரெய்லர் சாதனை…

யுடியூப்பில் ஆர்யாவின் ‘டெடி’ டிரெய்லர் சாதனை…

News, Tamil News, Videos
சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், யுடியூப்பில் இந்த ட்ரெய்லர் வீடியோவை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.  
நயன்தாரா இல்லனா அந்த நடிகை… கௌதம் மேனன் சாய்ஸ் சரியா வருமா?…

நயன்தாரா இல்லனா அந்த நடிகை… கௌதம் மேனன் சாய்ஸ் சரியா வருமா?…

News, Tamil News
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் நயன்தாரா நடித்தால் சரியாக இருக்கும் எனக்கருதிய கவுதம் மேனன் அவரிடம் கேட்டாராம். ஆனால், நயன்தாரா மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஆனாலும், தயாரிப்பு தரப்பு அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே, ஒரு வேளை நயன்தாரா நடிக்கவில்லை எனில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரித்து வர்மாவை நடிக்க வைக்கலாம் என கவுதம் மேனன் கருதுகிறாராம். சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்......
தளபதி 65 படத்தை இந்தியாவே விரும்பும்! – ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா டிவிட்

தளபதி 65 படத்தை இந்தியாவே விரும்பும்! – ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா டிவிட்

News, Tamil News
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் நண்பன், விண்ணைத்தாண்டி வருவாயா, ராதேஷ்யாம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்நிலையில், மனோஜ் பரமஹம்சா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விரைவில் இந்தியாவே விரும்பும் ஒருவருடன் மீண்டும் இணையவுள்ளேன். நண்பன் படத்தில் விட்டது இப்போது மீண்டும் தொடர்கிறது. தளபதி 65 படம் இந்தியாவே ரசிக்கும் படமாக உருவாகும்’ என பதிவிட்டுள்ளார்....
போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புது வீடு – வைரலாகும் பூமி பூஜை புகைப்படங்கள்

போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புது வீடு – வைரலாகும் பூமி பூஜை புகைப்படங்கள்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் தனுஷ். அசுரன் படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் போயஸ்கார்டனில் ஒரு புதிய வீடு கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்கான நிலத்தை சில மாதங்களுக்கு முன்பு வாங்கினார். தற்போது வீடு கட்டும் பணி துவங்கியுள்ளது. அதற்கான பூமி பூஜை கட்டும் பணி இன்று காலை துவங்கியது. இந்த பூஜையில் தனுஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா, ரஜினி, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சில மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஜெட் வேகத்தில் தனுஷ் – கர்ணன் பட முக்கிய அப்டேட் இதோ!…

ஜெட் வேகத்தில் தனுஷ் – கர்ணன் பட முக்கிய அப்டேட் இதோ!…

News, Tamil News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தனது டப்பிங் வேலைகளை தனுஷ் முடித்துக்கொடுத்து விட்டாராம். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படம்,. அதேபோல், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என பிஸியாக இருந்தாலும் ஜெட் வேகத்தில் கர்ணன் பட டப்பிங்கை அவர் முடித்துக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
வலிமைக்கு பின் தல அஜித்தை இயக்கப்போவது யார் தெரியுமா?…

வலிமைக்கு பின் தல அஜித்தை இயக்கப்போவது யார் தெரியுமா?…

News, Tamil News
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் எனக்கூறப்படுகிறது.