
சிம்பு – கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மீண்டும் ஏ.ஆர்.ரகுமான்….
நடிகர் சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம் விண்ணைதாண்டி வருவாயா. இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் மீண்டும் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் சிம்பும், கௌதம் மேனனும் மீண்டும் இணைந்தனர்.
இடையில், சிம்பு-திரிஷாவை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன். தற்போது சில வருடங்கள் கழித்து சிம்புவை மீண்டும் கௌதம் மேனன் இயக்கவுள்ளார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனமும், சிம்புவும் சமீபத்தில் டிவிட்டரில் தெரிவித்தனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே சிம்பு - கௌதம் வாசுதேவ் கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மாபெரும...