web analytics
Wednesday, February 8SOCIAL MEDIA

Tag: சன் பிக்சர்ஸ்

அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். ஆனால், அவருக்கும் படம் பெரிதாக ஈர்க்கவ...
பீஸ்ட் படத்துக்கு அது இல்லையாம்!… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்….

பீஸ்ட் படத்துக்கு அது இல்லையாம்!… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்….

News, Tamil News
விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படும். அந்த விழாவில் விஜய் பேசும் குட்டிக்கதையோ அல்லது மறைமுக அரசியலோ பரபரப்பாக பேசப்படும். அதுவே, அப்படத்திற்கு சிறந்த புரமோஷனாகவும் அமையும். அதேநேரம், விஜய் ரசிகர்கள் பலரும் எப்படியாவது விஜயை நேரில் பார்த்துவிட வேண்டுமென விழா நடக்கும் இடத்தில் குவிவார்கள். எல்லோரும் உள்ளே செல்ல முடியாது என்பதால் வெளியே பலருக்கும் ஒரு திரை கட்டப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். அதில் கூட்ட நெரிசல் ஆகி போலீசார் தடியடி நடத்தும் சம்பவங்களும் இதற்கு முன்பு நடந்துள்ளது. இதையெல்லாம் கணக்குப்போட்ட விஜய் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவே வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். கொரோனா பரவல் முழுதாக முடியாத நிலையில், கூட்டம் கூடுவது தனக்கு கெட்டப்பெயரை கொண்டு வரும் எனவும் அவர் கருதுவதாக தெரிகிறது. அதேநேரம், துபாயில் டிரெய்ல...
ரஜினியை இயக்கப்போவது இவர்தான்!.. வெளியான வீடியோ….இது சூப்பர் காம்போ!….

ரஜினியை இயக்கப்போவது இவர்தான்!.. வெளியான வீடியோ….இது சூப்பர் காம்போ!….

News, Tamil News
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. பாபா படத்தில் இது துவங்கியது. மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார் ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் அவர் அப்செட்டில் இருக்கும் ரஜினி அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவரின் படங்களை இயக்கும் இயக்குனர்களின்பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார், நெல்சன் என பலரின் பெயர்கள் அடிபட்டது. தற்போது இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்கு...
ஜனவரி 26 வெளியாகிறதா பீஸ்ட் பட பாடல்?.. உண்மை நிலவம் என்ன?…..

ஜனவரி 26 வெளியாகிறதா பீஸ்ட் பட பாடல்?.. உண்மை நிலவம் என்ன?…..

News, Tamil News
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வைரலானது.இப்படத்திற்கு பின் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். ஒருபக்கம் பீஸ்ட் படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை கொடுக்கவில்லை. இப்படம் வருகிற கோடை விடுமுறையில் அதாவது ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட ரிலீ...
5 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம் – புதிய அறிவிப்பு

5 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம் – புதிய அறிவிப்பு

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சூரி, சத்தியராஜ் என பலரும் நடித்துள்ளனர். குடும்ப பாங்கான படங்களை இயக்கி வரும் பாண்டிராஜ் இப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்‌ஷன் விருந்தையும் ரசிகர்களுக்கு வைத்துள்ளார்.இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக சூர்யா நடிக்கும் ஒரு திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே – தளபதி 65 மாஸ் அப்டேட்

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே – தளபதி 65 மாஸ் அப்டேட்

News, Tamil News
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ட திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே வெளியாகியது. ஆனால், தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.. பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமுடி’ படத்தில் நடித்தவர். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 !@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures #PoojaHegdeInThala...
மீண்டும் தள்ளிப்போன அண்ணாத்த படப்பிடிப்பு.. ரஜினிதான் காரணமா?

மீண்டும் தள்ளிப்போன அண்ணாத்த படப்பிடிப்பு.. ரஜினிதான் காரணமா?

News, Tamil News
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார். எனவே, அண்ணாத்தே படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பீதி அடைந்த ரஜினி தற்போது படப்பிடிப்பு வேண்டாம் எனவும், இன்னும் 2 வாரங்கள் கழித்து, அதாவது, ஏப...
சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – இதோ வீடியோ!

சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – இதோ வீடியோ!

News, Tamil News
தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிதான் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர். அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொன்ராம் சசிக்குமாரை வைத்து இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU — Sun Pictures (@sunpictures) March 17, 2021 ...
தளபதி 65 படத்துக்கு கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே….

தளபதி 65 படத்துக்கு கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே….

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சம் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமுடி’ படத்தில் தமிழில் அறிமுகமானார். ஆனால், அப்படத்தின் தோல்வியால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அவர் தெலுங்கு பக்கம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது....
ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்

ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் இறுதிகட்ட பணியில் நெல்சன் இருப்பதால் ஏப்ரல் மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது....
விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…

விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…

News, Tamil News
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த ‘அண்ணாத்த’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்தது. அந்நிலையில்தான், 2021 நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ வெளியாகும் என் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினி தற்போஒது ஓய்வில் இருக்கிறார். அவரை சமீபத்தில் இயக்குனர் எடுக்கவுள்ளார். அதன்பின், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும்,சென்னையிலேயே படப்பிடிப்பை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது திட்டமிட்ட நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மார்ச் 15ம் தேதி படப்பிடிப்பை துவங்குவோம் என ரஜினி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்....
தளபதி 65 ஷூட்டிங்கில் பெரிய மாற்றம் – அப்செட்டில் விஜய் ரசிகர்கள்

தளபதி 65 ஷூட்டிங்கில் பெரிய மாற்றம் – அப்செட்டில் விஜய் ரசிகர்கள்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் தற்போது டாக்டர் படத்தின் இறுதி கட்ட வேலையில் பிஸியாக இருக்கிறார். மார்ச் மாதம் டாக்டர் படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே விஜய் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குவதாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் பட பணிகள் காரணமாக தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்பை முடித்து 2021 தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால்,தீபாவளிக்கு அண்ணாத்தே படம் வெளியாவதால் 2022 பொங்கல் பண்டிகையின் போது இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது....
அண்ணாத்தே படப்பிடிப்பு நடக்குமா?… முக்கிய அப்டேட்…

அண்ணாத்தே படப்பிடிப்பு நடக்குமா?… முக்கிய அப்டேட்…

News, Tamil News
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த அண்ணாத்தே படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ரஜினி ஒரு மாதம் ஓய்வு எடுக்கவுள்ளார். அதன்பின், பிப்ரவரியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது....
விஜயுடன் ஜோடி போடும் பிரபல நடிகை… வயித்தெறிச்சலில் சக நடிகைகள்…

விஜயுடன் ஜோடி போடும் பிரபல நடிகை… வயித்தெறிச்சலில் சக நடிகைகள்…

News, Tamil News
விஜயின் ஒவ்வொரு படமும் துவங்கும் போதும் அதில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என முன்னணி நடிகைகள் முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. தற்போது அந்த வாய்ப்பு தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்துள்ளது. நெல்சன் இயக்கதில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை தெரிய வரும். பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது....
தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா எனும் வெற்றிபடத்தை இயக்கிவர். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’படத்தை இயக்கி வருகிறார். தற்போது அவர் இயக்கப்போவது விஜயின் 65 வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. மூன்று கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்து அடுத்த தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட விஜயும், நெல்சனும் திட்டமிட்டுள்ளனர். 2021 பொங்கலுக்கு மாஸ்டர், தீபாவளிக்கு நெல்சன் படம் என ஒரே வருடத்தில் விஜயின் 2 படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது....