
பீஸ்ட் – வலிமை நேரடி மோதலா? .. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து….
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி பொங்கலுக்கு வெளியாக முடிவெடுத்து கடந்த ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டும் விட்டது.
ஆனால், தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி மற்றும் பல மாநிலங்களிலும் தியேட்டகள் மூடப்பட்ட நிலையில் வசூல் பாதிக்கும் என்பதால் பட ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியும் கொரொனா அலை அடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம். எனவே, எப்ரல் அல்லது மே மாதம் வலிமை வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருபக்கம், விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட்ட திட்டமிட்டுள்ளனர்.
எனவே, வலிமை, பீஸ்ட் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுமா இல்லை அடுத்த...