
திருப்பதியில் நடந்த சம்பவம்!…மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்….
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு நேற்று நயனும், விக்கியும் திருப்பதி கோவிலிக்கு வழிபட சென்றனர். அப்போது கோவிலுக்குள் இருவரும் செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ‘திருமணம் முடிந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம். அப்போது பலரும் எங்களை சூழ்ந்து கொண்டனர். எனவே அங்கிருந்து ...