
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்…
சென்னையில் தற்போது 18வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. தமிழில் சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள், காட் பாதர், க/பெ ரணசிங்கம், சியான்கள் உள்ளிட்ட 13 திரைப்படங்கள் பங்கேற்றது.
இதில், க/பெ ரணசிங்கம் படத்தில் அரியநாச்சி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். அவருக்கு திரைப்பிரலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....