
விக்ரமுக்கு என்னாச்சு?…என்ன சிகிச்சை?….முழு விபரம் இதோ…
தமிழ் சினிமாவில் சேது திரைப்படம் மூலம் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் நடிகைர் விக்ரம். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், மறுபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பிதாமகன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றவர்.
தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். கோப்ரா திரைப்படம் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக இன்று மதியம் செய்திகள் பரவியது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ‘இதயத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டார். எங்கள் மருத்துவர்கள் அவருக்கு சிறந்த சிகிச்சை அளித்தனர். அவருக்கு...