
ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார்…
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். அவரின் சொந்த வாழ்க்கை மிகவும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் ஒன்றாக மாறும் அளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து வருபவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு உதவியாக இருந்த பீட்டார் பால் என்பவரை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார்.
தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பனங்காட்டுப்படை என்கிற அரசியல் கட்சியை நடத்தி வரும் ஹரி நாடார் இதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முத்தமிழ் வர்மா என்பவர் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘2K அழகானது ஒரு காதல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது. இந்த விழாவில் ஆர்.பி.சவுத்ரி உள்ளிட்ட பலரும...