web analytics
Thursday, August 11SOCIAL MEDIA

Tag: சிம்பு திருமணம்

அத செஞ்சிட்டுதான் கல்யாணம்…. சிம்பு எடுத்த முடிவு சரியா?….

அத செஞ்சிட்டுதான் கல்யாணம்…. சிம்பு எடுத்த முடிவு சரியா?….

News, Tamil News
தமிழ் சினிமாவில் எப்போதும் செய்திகளில் அடிபடும் நடிகராக இருப்பவர் சிம்பு. இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஒருபக்கம், நடிகை நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டிய பின்பே திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு சிம்பு வந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின்பே நான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் அறிவித்தார். நடிகர் சங்கமும் கட்டிய பாடில்லை. விஷாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே எங்கே சிம்புவும் அப்படி ஆகிவிடுவாரோ என அவரின் ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கிழக்கு கடற்கரையில் வீடு கட்டுவது நடிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. நடிகர் வ...
சிம்புவுக்கு விரைவில் திருமணம்?.. கல்யாண பொண்ணு அவர்தானாம்!..

சிம்புவுக்கு விரைவில் திருமணம்?.. கல்யாண பொண்ணு அவர்தானாம்!..

News, Tamil News
தமிழ் சினிமாவில் 35 வயதை கடந்த பின்பும் முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. நயன்தாரா, ஹன்சிகா என 2 நடிகைகளுடன் காதல் ஏற்பட்டு பின்னர் பிரேக்கப் ஆனது. சமீபத்தில் மாநாடு என்கிற ஹிட் படத்தையும் கொடுத்தார் சிம்பு. ஒருபக்கம் உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வி விடாமல் அவரை துரத்தி வருகிறது. அவரும் எதையாவது சொல்லி சமாளித்து வருகிறார். அநேரம், ஈஸ்வரன் படத்தில் அவருடன் நடித்த நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் ஏற்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், இருவரும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சிம்புவின் காதலுக்கு அவரின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், விரைவில் சிம்பு திருமண செய்தி வெளியாகலாம் எனவும் செய்திகள் கசிந்துள்ளது....