
மாநாடு டீசர் அப்டேட் கொடுத்த சிம்பு.. உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்…
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாள் அன்று யாரும் தன்னை பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம் எனவும், பிறந்த நாள் பரிசாக மாநாடு டீசர் வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களை விரைவில் சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சிம்பு தனது பிறந்தநாளை வருகிற பிப்ரவரி 3ம் தேதி கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
...