web analytics
Saturday, August 6SOCIAL MEDIA

Tag: சிம்பு

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர்!…மாநாடு படத்தின் வசூல் இத்தனை கோடியா?!…

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர்!…மாநாடு படத்தின் வசூல் இத்தனை கோடியா?!…

News, Tamil News
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படம் கடந்த வருடம் நவம்பர் 25ம் தேதி வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ் புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை நெருங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.117 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர...
வாவ்.!….ஸ்டன்னிங் லுக்கில் நடிகர் சிம்பு… அவரே வெளியிட்ட புகைப்படம்..

வாவ்.!….ஸ்டன்னிங் லுக்கில் நடிகர் சிம்பு… அவரே வெளியிட்ட புகைப்படம்..

News, Tamil News
நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு மாஸ் ஹிட்டுக்கு பின் இப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரைக்கும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் பத்து தல என்கிற படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இந்நிலையில்,தாடி, கூலிங் கிளாஸ், ஜெர்க்கின் அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை சிம்பு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ...
ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ரஜினி மகள்?… அப்ப சிம்பு என்னாச்சு?!…

ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ரஜினி மகள்?… அப்ப சிம்பு என்னாச்சு?!…

News, Tamil News
திரையுலகில் சிம்பு, தனுஷ் இடையே எப்போதும் ஒரு போட்டி உண்டு. பொது இடங்களில் நண்பர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு. ஐஸ்வர்யாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அது பிரேக் அப் ஆனதாகவும், சிம்புவை கோபப்படுத்தவே ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட ஒரு கதை இருக்கிறது. தனுஷும் – ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடித்து வர, ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் எடுப்பதில் பிஸியானார். அதோடு, அடுத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதோடு, நடிகர் சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து ஐஸ்வர்யா கதை பற்றி விவாதித்த...
சாரே இது கொல மாஸ்!….வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு…

சாரே இது கொல மாஸ்!….வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு…

News, Tamil News
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு ஹிட்டுக்கு பின் சிம்புவின் அடுத்த படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக சிம்பு உடல் இளைத்து சிறு வயது பையன் போல் மாறினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தின் 3ம் கட்டப்படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்தது. இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய கிளிம்பிஸ் வீடியோவை வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், என்ஃபீல்ட் பைக் மீது அவர் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
மாநாடு ஹிட்.. சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிய வெங்கட்பிரபு…

மாநாடு ஹிட்.. சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிய வெங்கட்பிரபு…

News, Tamil News
சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரானவர் வெங்கட் பிரபு. இவர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார். சென்னை 28 ஹிட் அடிக்கவே சரோஜா, கோவா என சில படங்கள் எடுத்தார். ஆனால், அஜித்தை வைத்து அவர் எடுத்த மங்காத்த திரைப்படம் அவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. அதன் பின்னரும் அவர் சில படங்கள் எடுத்தார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை. சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் அவரின் திரை வாழ்வை மாற்றியுள்ளது. மாநாடு திரைப்பட்டம் கிட்டதட்ட 100 கோடி வசூலை எட்டியது. மாநாடு படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 4 கோடி மட்டுமே. ஆனால், தற்போது ஒரு தெலுங்கு படத்திற்கு அவர் பேசியுள்ள சம்பளம் ரூ.15 கோடி என்கிறார்கள். அதேநேரம், ஒரு புதிய தமிழ் படத்தை இயக்க ரூ.7 கோடி சம்பளமும் அவருக்கு பேசப்பட்டுள்ளது. எப்படியோ, மாநாடு திரைப்படம் அவரை எங்கோ கொண்டு சென்றுவிட்டது....
மாநாடு வெளியாகி 50 நாட்கள்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சுரேஷ் காமாட்சி…

மாநாடு வெளியாகி 50 நாட்கள்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சுரேஷ் காமாட்சி…

News, Tamil News
சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை வெங்கட் பிரபு தயாரித்திருந்தார். பல தடைகளை மீறி இப்படம் வெற்றி பெற்றது. டைம் லூப் திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எல்லோருக்கும் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது அவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும். மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது. 50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணைய...
வெந்து தணிந்தது காடு இறுதிக்கட்ட படப்பிடிப்பு… ஜெட் வேகத்தில் படக்குழு….

வெந்து தணிந்தது காடு இறுதிக்கட்ட படப்பிடிப்பு… ஜெட் வேகத்தில் படக்குழு….

News, Tamil News
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக ராதிகாவும், ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். இவர் கேரளாவை சேர்ந்தவர். பொதுவாக கவுதம் மேனன் - சிம்பு இணையும் படம் எனில் படப்பிடிப்பு தாமதமாத்தான் முடியும். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி மாதம் இறுதியோடு இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3ம் தேதி துவங்கவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்....
தெறிக்க விடும் சிம்பு.. வெந்து தணிந்தது காடு டீசர் வீடியோ

தெறிக்க விடும் சிம்பு.. வெந்து தணிந்தது காடு டீசர் வீடியோ

News, Tamil News, Teasers, Videos
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு ஹிட்டுக்கு பின் சிம்புவின் அடுத்த படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக சிம்பு உடல் இளைத்து சிறு வயது பையன் போல் மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தின் 3ம் கட்டப்படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய கிளிம்பிஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வீடியோ சிம்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் வீடியோவில் அதிரடி சண்டி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=yuhAAONZvVI&feature=youtu.be ...
மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகர்தான்.. வெங்கட்பிரபு கூறிய ரகசியம்..

மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகர்தான்.. வெங்கட்பிரபு கூறிய ரகசியம்..

News, Tamil News
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். அதே நேரம் முதலில் அந்த வேடத்தில் நடிக்க விருந்தது மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்தானாம். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக ஒய்.ஜி.மகேந்திரனை நடிக்க வைத்துள்ளனர். ...
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட மாநாடு சண்டை காட்சி வீடியோ..

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட மாநாடு சண்டை காட்சி வீடியோ..

News, Special Video, Tamil News, Videos
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தின் இடம் பெற்ற பல காட்சிகள் ரசிகர்களை சிலாகிக்க வைத்தாலும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சி சண்டை காட்சியை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த சண்டை காட்சியில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி த...
மாநாடு படப்பிடிப்பில் சக நடிகர்களுன் சிம்பு – வைரல் புகைப்படம்

மாநாடு படப்பிடிப்பில் சக நடிகர்களுன் சிம்பு – வைரல் புகைப்படம்

News, Tamil News
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு சக நடிகர்களுடன் சிம்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
நயன்தாரா இல்லனா அந்த நடிகை… கௌதம் மேனன் சாய்ஸ் சரியா வருமா?…

நயன்தாரா இல்லனா அந்த நடிகை… கௌதம் மேனன் சாய்ஸ் சரியா வருமா?…

News, Tamil News
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் நயன்தாரா நடித்தால் சரியாக இருக்கும் எனக்கருதிய கவுதம் மேனன் அவரிடம் கேட்டாராம். ஆனால், நயன்தாரா மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஆனாலும், தயாரிப்பு தரப்பு அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே, ஒரு வேளை நயன்தாரா நடிக்கவில்லை எனில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரித்து வர்மாவை நடிக்க வைக்கலாம் என கவுதம் மேனன் கருதுகிறாராம். சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்......
விரைவில் அம்மாவாகும் ஒஸ்தி பட நடிகை… வைரல் புகைப்படம்…

விரைவில் அம்மாவாகும் ஒஸ்தி பட நடிகை… வைரல் புகைப்படம்…

News, Tamil News
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’படத்தில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா. அதன்பின் ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் திடீரென காணாமால் போனார். திரையுலகிலிருந்தே விலகிய அவர் ஒரு வெளிநாட்டுக்காரரை திருமணமும் செய்து கொண்டி செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் கணவருடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘ இந்த தகவலை இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைத்திருந்தோம். இப்போது மகிழ்ச்சியுடன் இதை வெளியிடுகிறோம். விரைவில் பேபி ரிச்சாவை பார்க்க ஆவலாக இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.     We've been keeping a LITTLE secret 🤫 Joe and I are so excited to finally share with everyone.... BABY LANGELLA COMING THIS JUNE! Our hearts are so full of happiness and gratitude 🌺. We can't wait to meet our little bund...
கங்கை நதியில் கையில் விளக்கு.. பக்தி பழமாக மாறிய சிம்பு.. வைரல் புகைப்படங்கள்

கங்கை நதியில் கையில் விளக்கு.. பக்தி பழமாக மாறிய சிம்பு.. வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
உடல் எடையையை தாறுமாறாக ஏற்றி கிண்டலுக்கு உள்ளான சிம்பு, உடலை குறைத்தே தீருவேன் என கங்கணம் கட்டு தனது உடல் எடையை பாதியாக குறைத்தார். அதன்பின் ஈஸ்வரன் படத்தில் நடித்து கொடுத்துவிட்டு, தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தயாரிப்பாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிம்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஐய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி அவர் தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில், காசியில் கங்கை நதியில் அவர் விளக்கு விடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது....
சிம்பு படமா? ஆளை விடுங்க!.. கவுதம் மேனனுக்கு நோ சொன்ன நயன்தாரா..

சிம்பு படமா? ஆளை விடுங்க!.. கவுதம் மேனனுக்கு நோ சொன்ன நயன்தாரா..

News, Tamil News
நடிகர் சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம் விண்ணைதாண்டி வருவாயா. இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் மீண்டும் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் சிம்பும், கௌதம் மேனனும் மீண்டும் இணைந்தனர். இடையில், சிம்பு-திரிஷாவை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன். தற்போது சில வருடங்கள் கழித்து சிம்புவை மீண்டும் கௌதம் மேனன் இயக்கவுள்ளார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனமும், சிம்புவும் சமீபத்தில் டிவிட்டரில் தெரிவித்தனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே சிம்பு – கௌதம் வாசுதேவ் கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்...