
விக்ரமின் புதிய படத்திலும் சிம்ரன்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து….
தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 15 வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அவரின் நடன அசைவுக்கே ரசிகர்கள் சொக்கி போய் கிடந்தனர். அவருடன் சேர்ந்து நடனமாடினால் தன்னை காலி செய்து விடுவார் என விஜய், அஜித் போன்ற நடிகர்களை பயந்த காலமும் உண்டு.
திடீரென திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிய சிம்ரன், சில வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்தார். நல்ல கதைகளை தேர்ந்து நடித்து வருகிறார். தற்போது பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்திலும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமின் புதிய படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த தகவலை பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
...