Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

Tag: சிலம்பரசன்

மாநாடு படப்பிடிப்பில் சக நடிகர்களுன் சிம்பு – வைரல் புகைப்படம்

மாநாடு படப்பிடிப்பில் சக நடிகர்களுன் சிம்பு – வைரல் புகைப்படம்

News, Tamil News
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு சக நடிகர்களுடன் சிம்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
சென்னையில் பிரம்மாண்ட செட் – இறுதிகட்ட படப்பிடிப்பில் மாநாடு

சென்னையில் பிரம்மாண்ட செட் – இறுதிகட்ட படப்பிடிப்பில் மாநாடு

News, Tamil News
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது....
150 தியேட்டரில் சிம்புவின் பழைய படம் ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்….

150 தியேட்டரில் சிம்புவின் பழைய படம் ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்….

News, Tamil News
நடிகர் சிம்பு நடித்து 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிம்புவுடன் ஜோதிகா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆண்களை ஏமாற்றி மோசடி செய்யும் இளம் பெண்களை குறிவைத்து சிம்பு வேட்டையாடும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்து. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மிகவும் சிறப்பாக இசையமைத்திருந்ததால் பாடல்கள் செம ஹிட் ஆனது. இந்நிலையில், இப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த பணியை நந்தினி தேவி பிலிம்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மார்ச் 19ம் தேதி இப்படம் தமிழகத்தில் 150 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
மாநாடு படம் அந்த படம் இல்லை.. வெங்கட் பிரபு விளக்கம்…

மாநாடு படம் அந்த படம் இல்லை.. வெங்கட் பிரபு விளக்கம்…

News, Tamil News
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள் இப்படம் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனண்ட்’ படம் போல் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த வெங்கட்பிரபு ‘மாநாடு படத்தை ‘டெனண்ட்’ படத்தோடு ஒப்பிடுவது பெருமைதான். ஆனால், அதில் உண்மையில்லை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் டெனண்ட் படம் எனக்கு புரியவே இல்லை. மாநாடு படத்தின் டிரெய்லர் வீடியோ வரும் வரை பொறுத்திருங்க. அதன்பின் மாநாடு படத்தை மற்ற படங்களோடு ஒப்பிடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.   I am very honored that people are comparing our #maanaaduteaser with #tenet but unfortunately this ain’t connected with it!To be honest even I didn’t understand #tenet 😁 wait for our trailer!Then u might compare us with ...
பட்டைய கிளப்பும் சிம்பு!… மாஸ் காட்டும் ‘மாநாடு’ டீசர் வீடியோ..

பட்டைய கிளப்பும் சிம்பு!… மாஸ் காட்டும் ‘மாநாடு’ டீசர் வீடியோ..

News, Tamil News, Teasers, Videos
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே 5 மொழிகளிலும் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.   ...
மாநாடு டீசர் அப்டேட் கொடுத்த சிம்பு.. உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்…

மாநாடு டீசர் அப்டேட் கொடுத்த சிம்பு.. உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்…

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில், சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாள் அன்று யாரும் தன்னை பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம் எனவும், பிறந்த நாள் பரிசாக மாநாடு டீசர் வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களை விரைவில் சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். சிம்பு தனது பிறந்தநாளை வருகிற பிப்ரவரி 3ம் தேதி கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
மாஸ் காட்டும் சிம்பு… லைக்ஸ் குவிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

மாஸ் காட்டும் சிம்பு… லைக்ஸ் குவிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

News, Tamil News
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சிம்பு மாநாடு மற்றும் பத்து தல எனும் 2 படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மட்டுமில்லாமல் கௌதம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரியா பவானி சங்கரும் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.   #PathuThala #ObelinKrishna #Studiogreen#SilambarasanTR45 #studiogreen20#pathuthalai #pathuthalaiofficial#STR#SilambarasanTR #GauthamKarthik #Priyabhavanishankar #Teejay pic.twitter.com/4gwKtXGTpK — Silambarasan TR (@SilambarasanTR_) January 18, 2021 ...
தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு! – ஈஸ்வரன் வெளியாகுமா?

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு! – ஈஸ்வரன் வெளியாகுமா?

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், 14ம் தேதி இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் ஓடிடியில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய விருப்பமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு ஈஸ்வரன் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....
சிம்பு ரசிகர்களுக்கு செம பொங்கல்!…ஈஸ்வரன் பட டிரெய்லர் அப்டேட்..

சிம்பு ரசிகர்களுக்கு செம பொங்கல்!…ஈஸ்வரன் பட டிரெய்லர் அப்டேட்..

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போது வரை டிரெய்லர் வீடியோ வெளியாகவில்லை. தற்போது தியேட்டரில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால், விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகும் எனத்தெரிகிறது. அநேகமாக வருகிற 9ம் தேதி ஈஸ்வரன் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகும் என கருதப்படுகிறது. இந்த செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது....
அந்த இயக்குனருடன் மீண்டும் ஒரு படம் – சிம்பு மாஸ் அறிவிப்பு

அந்த இயக்குனருடன் மீண்டும் ஒரு படம் – சிம்பு மாஸ் அறிவிப்பு

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சிம்பு, சுசீந்திரன், பாரதிராஜா மற்றும் சிம்பு ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சிம்பு ‘மாநாடு, பத்து தல படத்திற்கு பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும். இது தவிர மேலும் 3 படங்களிலும் நடிக்க உள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்....