
பீஸ்ட் படத்தின் தெறி மாஸ் அப்டேட் வெளியீடு… விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்….
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அதாவது இப்படத்தின் பாடல் ஒன்றை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
டாக்டர் படத்திற்கு செல்லம்மா பாடலை உருவாக்கிய போது எடுக்கப்பட்ட காமெடி வீடியோ போல் இந்த பாடலுக்கும் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர். இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=-aVdxDDrcTc...