
நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி
இயக்குனர் மணி கண்டன் இயக்கிய ரேணிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். மதுரையை சேர்ந்த இவர் தான் நடிக்கும் படங்களில் மதுரை பாஷை பேசி நடித்து வந்தார். விஜய் சேதுபதியின் நண்பனாக ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்தார்.
மேலும்,பில்லா 2, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இந்த செய்தியை இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தீப்பெட்டி கணேசனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது....